திருகோணமலை பாலையூற்றில் உள்ள புனித லூர்து அன்னை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் ஆரம்ப நிலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பாடசாலையின் பெற்றோர்,ஆசிரியர்கள் இணைந்து தமிழ் எழுத்து பயிற்சி கையேடு,படங்களுடன் கூடிய தமிழ் சொற்களின் பதாகைகள் என்பவற்றை செய்துதரும்படி எமது மன்றத்திடம் கேட்டிருந்தனர். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக நாம் அதற்கு சம்மதம் தெரிவித்து.வழங்கியிருந்தோம்.