கிளிநொச்சி திருநகர்தெற்கில் அமைந்திருக்கும் பாரதி முன்பள்ளியில் இணைந்திருக்கும் 47 சிறார்களுக்கான சீருடைகள் எமது மன்றத்தினால் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.மேற்படி நிகழ்வானது 17.08.2023 வியாழக்கிழமையன்று இடம்பெற்றறது. இந்த நிகழ்வில் கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் திரு.சந்திரன் சனசமூகத்தலைவர் திரு.சிவபாலன், பெற்றோர் சங்கத்தலைவர் திரு.யோகராசா மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களான ச.சிவராஜினி,வி.சுதா,ந.சுபோதினி ஆகியோருடன் சகல பெற்றோரும் கலந்து சிறப்பித்தனர்.