கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலையில் இவ்வாண்டு(2023) புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் 40மாணவர்களுக்கு மேலதிக பயிற்சிகளை வழங்குவதற்கு தேவையான அப்பியாசக்கொப்பிகள் எழுதுகருவிகள்,மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை முன்னணி ஆசிரியரான திரு செ.நிஷாந்தனின் புலமைத்தேடல் பயிற்சி வினாத்தாள்களை பெற்றுக்கொள்வதற்கான கட்டணமாக(40x 700= 28000) 28000ரூபாவினையும் தந்துதவுமாறு பாடசாலையின் வகுப்பாசிரியர் அதிபருடாக எமக்கு கடிதமூலம் கேட்டிருந்தார்.அதற்கிணங்க 18.04.2023 செவ்வாய்க்கிழமையன்று ஒவ்வொரு மாணவருக்கும் 1605 ரூபா பெறுமதியிலான கற்றல் உபகரணங்களும். திரு.செ.நிஷாந்தனின் புலமைத்ததேடல் முன்னோடி பயிற்சி வினாத்தாள்களை பெற்றுக்கொள்வதற்கான 28000 ரூபாவினை நேரடியாக திரு செ.நிஷாந்தனின் வங்கிக்கணக்கிற்கு செலுத்தி வினாத்தாள்களை பெறுவதற்கான வசதியினையும் செய்து கொடுத்திருந்தோம்.