திருமலை பாலையூற்றில் அமைந்துள்ள வைரவர் கோவிலடி முன்பள்ளியிலுள்ள 46 சிறார்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் 20.05.2023 சனிக்கிழமையன்று வழங்கியிருந்தோம்.எமது மன்றம் சார்பில் கற்றல் உபகரணங்களை வழங்க சென்றிருந்த திரு.பா.சிவகுமார் திரு.சி.அசோகன் (பிரதேச செயலகம் மொரவெவ திருகோணமலை) திரு.அ.ரவீந்திரன் (வலயக்கல்வி அலுவலகம் திருகோணமலை) செல்வி.மாதங்கி அசோகன் (ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவி)இவர்களுக்கு முன்பள்ளியின் சிறுவர்கள் மாலையிட்டு வரவேற்றதுடன்,சில கலை நிகழ்வுகளையும் செய்துகாட்டி மகிழ்வித்திருந்தனர்.