நல்லதைச் செய்வோம். நம்மை, அது நின்று காக்கும்!…
எமது மன்ற மட்டக்கிளப்பு மாவட்ட உறுப்பினரான திரு. வே.பிரியதர்ஷன் மற்றும் அவரின் நண்பன் திரு.பிரதீபன் ஆகியோரின் மட்டக்கிளப்பு மாவட்டத்தின் 2வது தெரிவாக மட்/மமே/ நாற்பதுவட்டை விபுலானந்தா வித்தியாலயத்தை தெரிவு செய்திருந்தனர்.ஆண்டு1 தொடக்கம் ஆண்டு 9வரையுள்ள இப்பாடசாலையில் வகுப்பு ரீதியாக 5மாணவர்கள் என்ற அடிப்படையில் தெரிவுசெய்த மொத்தம் 45 மாணவர்களுக்கு 2023ஆம் கல்வியாண்டுக்கான தேவையான கற்றல் உபகரணங்கள் 03.04.2023 அன்று பாடசாலையின் அதிபர் திரு.பரா தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.