Learning Equipment VIII

Learning Equipment VIII

Learning equipment for 79 students of Mannar Eachchalawakkai G.T.M School was distributed on 30.03.2023. All the learning equipment needed for this year was purchased for each student at the cost of 15 Euro each.

“வாழும் காலத்தில் நல்லதை நினைத்து நல்லதை செய்துவிட்டு கடந்துவிடு மனிதா”

எமது அமைப்பால் இவ்வாண்டுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்களின் தொடர்ச்சியாக 4வது பாடசாலையாக மன்னார் ஈச்சளவக்கை அ.த.க பாடசாலையின் மாணவர்கள் 79 பேருக்கான கற்றல் உபகரணங்கள் 30.03.2023 அன்று வழங்கிவைக்கப்பட்டது. 5ம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்கள் 49பேருக்கும் ஒவ்வொருவருக்கும் தலா 5320 ரூபா பெறுமதியிலான கற்றல் உபகரணங்களும், 5ம் வகுப்பும் அதற்கு கீழ்ப்பட்ட மாணவர்கள் 30 பேருக்கு பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து எம்மிடம் கேட்டுக்கொண்ட சகல கற்றல் உபகரணங்களும் வாங்கி கொடுக்கப்பட்டது. நல்லுள்ளங்கொண்ட அனைவருக்கும் மிக்க மிக்க நன்றிகள்.

மனிதன் வாழ்வில் எதுவும் நடக்கலாம் ஆனால் இருக்கும் காலத்தில் யாருக்கும் ஒரு கெடுதல் நினைக்காமல் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *