மு/ஆரோக்கியபுரம் தமிழ் வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க மேலும் ஒரு தொகுதி பயிற்சிப்புத்தகங்கள் 27.06.2023வியாழக்கிழமையன்று வழங்கிவைக்கப்பட்டது.
திருகோணமலை பாலையூற்றில் இயங்கிவரும் அன்னை சாரதா முன்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமது முன்பள்ளியில் கல்விகற்கும் 22 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் தந்துதவுமாறு கேட்டிருந்தார்.அவரின் கோரிக்கைக்கிணங்க 20.05.2023 சனிக்கிழமையன்று 95000ரூபா பெறுமதியிலான கற்றல் உபகரணங்கள் வழங்கியிருந்தோம்.
கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலையில் இவ்வாண்டு(2023) புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் 40மாணவர்களுக்கு மேலதிக பயிற்சிகளை வழங்குவதற்கு தேவையான அப்பியாசக்கொப்பிகள் எழுதுகருவிகள்,மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை முன்னணி ஆசிரியரான திரு செ.நிஷாந்தனின் புலமைத்தேடல் பயிற்சி வினாத்தாள்களை பெற்றுக்கொள்வதற்கான கட்டணமாக(40x 700= 28000) 28000ரூபாவினையும் தந்துதவுமாறு பாடசாலையின் வகுப்பாசிரியர் அதிபருடாக எமக்கு…
பிறருக்கு உதவி செய்வது ஆனந்தமே.. அதில் எந்த வித மாற்றமும் கிடையாது. பாரதிபுரம் விசுவமடுகிழக்கில் அமைந்திருக்கும் செந்தாமரை முன்பள்ளிஆசிரியர்கள் தமது முன்பள்ளியில் கல்விபயில இணைந்திருக்கும் 45சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் தேவைப்படுவதாகவும் அவற்றை தந்துதவுமாறு கேட்டிருந்தனர்.13.04.2023 அன்று காலை எமது மன்றத்தினால் அவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கியிருந்தோம்.
கிளிநொச்சி திருநகர்தெற்கில் அமைந்திருக்கும் பாரதி முன்பள்ளி நிர்வாகத்தினர் தமது முன்பள்ளியில் இணைந்திருக்கும் 47 சிறார்களுக்கு தேவையான கல்விசார் பொருட்களை தந்துதவுமாறு எமது மன்றத்திடம் கடிதமூலம் கேட்டிருந்தனர். அப்பொருட்களை வாங்கி 13.04.2023 வியாழக்கிழமையன்று சிறார்களுக்கு வழங்கியிருந்தோம்.
Mr. Periyasamy, the principal of the school had asked to provide some necessary learning equipment to the students of class 1 to class 5 at Thiruvalluvar Vidyalaya, Vavuniya Kadaiyarkulam, accordingly we provided it on Wednesday…
மட்டக்கிளப்பு மாவட்டத்தின் கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கு தெரிவான 3வது பாடசாலையான மட்/மமே/பன்சேனை பாரி வித்தியாலயத்தில் இருந்து 40மாணவர்களை பாடசாலையின் அதிபர் திரு. பவளசிங்கம் தெரிவுசெய்து தந்துருந்தார், 02.04.2023 திங்கற்கிழமையன்று மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றபோது மாணவர்களின் கடவுள் வணக்கம் முதலிலும் தொடர்ந்து அதிபர் எமது…
நல்லதைச் செய்வோம். நம்மை, அது நின்று காக்கும்!… எமது மன்ற மட்டக்கிளப்பு மாவட்ட உறுப்பினரான திரு. வே.பிரியதர்ஷன் மற்றும் அவரின் நண்பன் திரு.பிரதீபன் ஆகியோரின் மட்டக்கிளப்பு மாவட்டத்தின் 2வது தெரிவாக மட்/மமே/ நாற்பதுவட்டை விபுலானந்தா வித்தியாலயத்தை தெரிவு செய்திருந்தனர்.ஆண்டு1 தொடக்கம் ஆண்டு 9வரையுள்ள இப்பாடசாலையில் வகுப்பு ரீதியாக 5மாணவர்கள்…
மட்டக்களப்பு அம்பாறை எல்லைக்கிராமமான மண்முனை பிரதேசத்தில் உள்ள மட்டு/மமே மாவடிமுன்மாரி அ.த.க பாடசாலையின் அதிபர் திரு.ஆர்.சூரியகுமார் மற்று சக ஆசிரியர்கள் இணைந்து தெரிவு செய்து தந்த தேவையுடைய 30மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 03.04.2023 அன்று எம்மால் வழங்கிவைக்கப்பட்டது. மேற்படி வழங்களுக்கான சகல ஏற்பாடுகளையும் ஒழுங்குபடுத்தி தந்த எமது மன்ற…