மட்டக்கிளப்பு மாவட்டத்தின் கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கு தெரிவான 3வது பாடசாலையான மட்/மமே/பன்சேனை பாரி வித்தியாலயத்தில் இருந்து 40மாணவர்களை பாடசாலையின் அதிபர் திரு. பவளசிங்கம் தெரிவுசெய்து தந்துருந்தார், 02.04.2023 திங்கற்கிழமையன்று மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றபோது மாணவர்களின் கடவுள் வணக்கம் முதலிலும் தொடர்ந்து அதிபர் எமது மன்றம் பற்றிய அறிமுகத்தை மாணவர்களுக்கு வழங்கியதுடன், மன்றத்தின் தலைவர் திரு.சண்முகம் தனபாலன் அவர்கள் கற்றல் உபகரணங்கள் வாங்குவதற்கான நிதி எப்படி சேகரித்தது என்றும்,இவற்றை பயன்படுத்தி நல்ல பெறுபேறுகள் பெறும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்படும் என்றும் கூறினார்.